Saturday, 22 July 2017

soil research for physics students



  Physics deals in general with the forms and interactions of matter and energy,  the Soil Physics deals specifically with the state and movement of matter and with the fluxes and transformations of energy in the soil. Soil physics is one of the major subdivisions of soil science. It seeks to define, measure, and predict the physical properties and behavior of the soil, both in its natural state and under the influence of some human activity. The fundamental study of soil physics aims at understanding the mechanisms governing processes such as terrestrial energy exchange, the cycles of water and of transportable materials, and the growth of plants in the field. On the other hand, the practical application of soil physics aims at the proper management of the soil by means of cultivation, irrigation, drainage, aeration, improvement of soil structure, control of infiltration and evaporation, regulation of soil temperature, and prevention of erosion. Soil physics is thus both a basic and an applied science, with a very wide range of interests.
The study of soil science in general and of soil physics in particular is driven not only by the innate curiosity that is “our species” main creative impulse, but also by urgent necessity. The intensifying pressure of population and development has diminished the soil resources of our small planet and has led to their unsustainable use and degradation in too many parts of the world. Since the soil is not an isolated medium but is in constant dynamic interaction with the larger environment, soil physics is an aspect of the more encompassing field of environmental physics (sometimes called biospheric physics) and of the overall science of geophysics. The early soil physicists were interested primarily in the engineering and the agricultural aspects of their discipline, hence their research focused on the soil as a material for construction or as a medium for the production of crops.
Recent decades have witnessed an increasing emphasis on the environmental aspects and applications of soil physics. Consequently, Physicists   have expanded its scope to include phenomena related to natural ecosystems and to processes affecting the quality of the environment. Processes occurring in the soil are now seen to affect the entire terrestrial environment, including local and regional climates, the natural food chain, biodiversity, and the fate
of the voluminous waste products of our civilization (among which are many pathogenic and toxic agents). Increasingly, the main concern of soil physics has shifted from the laboratory to the field and from a restricted one-dimensional view to an expansive three-dimensional view interfacing with the domains of sister disciplines such as meteorology and climatology, hydrology, ecology, and geochemistry. The larger domain of soil physics now encompasses greater complexity and variability in space and time, the treatment of which requires reliance on stochastic as well as deterministic methods. Consequently, the science is becoming ever more interesting and relevant.

The task of soil physics has become difficult by the enormous and baffling intricacy of a medium containing myriad mineral and organic components, all irregularly fragmented and variously associated in a geometric pattern that is so complex and liable to challenge our imagination and descriptive powers. Some of the spil solid material consists of crystalline particles, while some is made up of amorphous gels that may coat the crystals and modify their behavior.
The solid phase in the soil interacts with the fluids, water, and air that permeate soil pores. The entire soil is hardly ever in equilibrium as it alternately wets and dries, swells and shrinks, disperses and flocculates, hardens and softens, warms and cools, freezes and thaws, compacts and cracks, absorbs and emits gases, adsorbs and releases exchangeable ions, dissolves and precipitates salts, becomes acidic or alkaline, and exhibits aerobic or anaerobic conditions leading to chemical oxidation or reduction. Hence the Physics of crystalline and amorphous materials is an interesting aspects of soil for Physics researchers. They can measure, compare and speculate the mechanism of formation of such ensembles and associate them with geological findings. Hence for Physics researchers it gives an excellent avenue that can lead to  direct applications and directions that are valuable to protect one of the most valuable component of our eco system.

Science Bits 2



NanoTransformer using spider silk fiber composites

A new idea on the nano technology field has emerged recently to fabricate a nanotransformer that can be designed by using suitable nano materials employing composits comprising several   organic and inorganics  (1-3). The spider nets are having very good conductivity and flexibility and are also having a very great stress/ strain ratio. The spider net can be used as the material for designing the transformer in nano size, or even in the micro scale. This study  involves a  design of nano transformer which can substitute all of the power adopters of today world. Theoretical and experimental viability of using such materials are explored. This paper reviews the state of   art of this field of research and its potential in building future nanodevices and powering nanochips that can be implanted any where desired. The application involves ultra tiny rectifiers for biasing nanodiodes and transistors. Some artificial fibers available commercially can also be embedded with nanosuits to make them functional. This opens up a new avenue in many interesting nanodevices.

References
1.Predicting mechanical properties of a spider silk as a model nanostructured polymer
February 2005, Volume 16, Issue 2, pp 199-206
Date: 22 Feb 2005 2.Elasticity of Spider Silks
Biomacromolecules, 2008, 9 (7), pp 1782–1786
DOI: 10.1021/bm7014174
Publication Date (Web): June 5, 2008
3.Liquid crystalline spinning of spider silk
Fritz Vollrath & David P. Knight
Nature 410, 541-548 (29 March 2001) | doi:10.1038/35069000

திருவள்ளுவர் கூறும் "நானோ தொழில் நுட்பம்" (Nano Technology)



திருவள்ளுவர் கூறும் "நானோ தொழில் நுட்பம்" (Nano Technology)

பேராசியர். R.சந்திரமோகன்
இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை-630303
Published in Chemmozhi Manadu, KODISHA, Coimbatore

வள்ளுவனும் அறிவியலும்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது செம்மொழித் தமிழ்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து
(குறள் 353)

என்ற குறட்பாவிற்கு மாண்புமிகு கலைஞர் இப்படி உரையெழுதுகிறார்:  “ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்கு பூமியை விட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்”. அதன் மூலம் அவர்கள் செயற்கரிய செய்வார் என்றும் விளக்கமளிக்கிறார். ஆராய்ந்து தெளிந்த பல அறிவியற் கூறுகள் காலந்தோறும் நிறுவப்பெற்று வருகின்றன. அவ்விதமான விஞ்ஞான முடிவுகள் எதையும் வள்ளுவன் நிறுவவில்லை; ஆனால் தீர்க்கதரிசியான வள்ளுவன் அவற்றில் பலவற்றை முன்கூட்டியே அறிந்திருந்தான். 

பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்து
ப் பெயின் (குறள் 475)

என்பது ஒரு புகழ் பெற்ற குறட்பா. நிறையற்ற மயிலிறகேயானாலும், அது ஒரு வண்டியில் அளவிற்கு அதிகமாக ஏற்றப்பட்டால், அதன் அச்சு முறிந்து போகும். இவ்விதமான அறிவியல் செய்திகள் பல குறட்பாக்களில் காணக் கிடைக்கின்றன. இதைத் தமிழறிஞர்களும்  எடுத்துச் சொல்லி வந்திருக்கின்றனர். எனில், பொதுவான அறிவியல் உண்மைகளைக்கு அப்பால், 35 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுணரப்பட்ட, இன்று பெரும் வளர்ச்சி கண்டு வரும் நானோ தொழில்நுட்பத்தின் கூறுகளைப் போலும் வள்ளுவன் உணர்ந்திருக்கிறான். குறட்பாக்களில் நேராகவும் மறைபொருளாகவும் உள்ள நானோ அறிவியல் நுட்பங்களின் ஒரு நுனியைக் காணுகிற முயற்சியாக இக்கட்டுரை இருக்கும்.

நானோ தொழில்நுட்பம்

நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் பெயின்மேன்  தனது புகழ் பெற்ற Caltech விரிவுரையில் "There is plenty of  room at the bottom”   என்று குறிப்பிட்டார். அவர் அப்படிச் சொன்னது 1959இல். இதன் பொருள் அணுக்கரு அளவீடான 10-15 மீட்டருக்கும் மூலக்கூறுகள் அளவீடான 10-6 மீட்டருக்கும் இடையே ஏராளமான இடங்கள் புதிய கருத்தூன்றுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றன என்பதாகும். இந்த இடைவெளியில் ஆய்வுக்கான களம் இருப்பதை பல விஞ்ஞானிகள் உணர்ந்து கொண்டனர்; இடைவிடாத ஆராய்ச்சி மேற்கொண்டனர்; 10-9 மீட்டர் அளவேயான நானோ தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தனர்; அதை உலகிற்கு அர்ப்பணம் செய்தனர். 1974ஆம் ஆண்டு எரிக் ட்ரிக்ஸ்லர் என்பவர்தான் நானோ தொழில் நுட்பத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். இன்று நானோ தொழில் நுட்பம் அளப்பரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.  நானோ தொழில்நுட்பத்தின் வாயிலாக முதுமை தடுக்கப்படும் சாத்தியமும், இன்னும் இறவா நிலை, ஆயுள் நீட்டிப்பு, நோயற்ற வாழ்வு, DNA (De-Ribooxy Nucleic Acid) மருத்துவம் போன்ற பலவும் பேசப்படுகின்றன. இனிவரும் காலத்தில் DNAக்களின் குறைபாடுகளை நீக்குவதும், கார்பன் நானோ குழாய்களின் வழியாக புற்று நோயை அழிக்கும் தொழில் நுட்பம் போன்றவையும் இயல்வதாகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறளில் நானோ

மெய்ப்பொருள் என்ற அதிகாரத்தில் உள்ள அனைத்துப் பாக்களிலும் நானோ தொழில்நுட்பத்தின் கூறுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
     
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
(குறள் 355)

எப்பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும் அந்தத் தோற்றத்தை உண்மையெனக் கொள்ளாமல், அதன் மெய்த்தன்மையைக் காணவேண்டும் என்பது இக்குறட்பாவின் கருத்து. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தன்மையிருக்கும் என்பது மேலோட்டமான பொருள்.
அடுத்ததாக, ஒரே பொருள் பல தன்மைகளைப் பெற்றிருக்கும் என்ற செய்தியும் இந்தக் குறட்பாவில் இருக்கிறது. நீர் என்கிற ஒரே பொருள், பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும், நீராவியாகவும் மூன்று தன்மைகளைப் பெறும். அதாவது, ஒரு பொருள் திடம், திரவம், வாயு என்று பல தன்மைகளைப் பெறலாம். இது சராசரி ஆய்வாளர் கொள்ளும் பொருள். எனில், வள்ளுவன் இக்குறட்பாவில் இன்னும் ஆழமான அறிவியல் செய்திகளைப் பொதிந்து வைத்திருக்கிறான். ஒரு பொருள் நானோ அளவுகளில் அமையுமானால் அவற்றின் துகள் அளவிற்கு ஏற்ப அவற்றின் தன்மையும் மாறுபடும். எடுத்துக்காட்டாக காட்மியம் சல்பைடின் துகள் அளவிற்கு ஏற்ப அதன் ஒளியியல் பண்பு மாறுபடும். ஒரு பொருளின் அளவையும் அதன் மூலம் அதன் தன்மையையும் அறிந்தால்தான் அப்பொருளின்  மெய்த்தன்மையை உணராலாம். இந்தச் செய்தியில் நானோ நுட்பம் இருக்கிறது. ஒரு பொருள் பலதன்மை(காண்க: படம்) என்பது நானோ நுட்பத்திலிருந்து பெறப்பட்ட அறிவாகும்.
QDot-nanocrystal

இதே அதிகாரத்தில் இடம்பெறும் இன்னொரு குறள்,

பிறப்பெனும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்பது அறிவு
(குறள் 358)
பிறப்புக்கு முதற்காரணமாகிய அவிச்சை (அறியாமை) கெட, வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது என விளக்குகிறார் பரிமேலழகர். அறியாமையை நீக்குவதால் மெய்யுணர்வு பிறக்கிறது. இதனால், அறிவுடையோர் வெளித்தோற்றத்தில் மயங்காமல் பொருளின் மெய்த்தன்மையைக் காண்பார்கள் என்று வள்ளுவன் சொல்வது புலப்படும். இந்த மெய்த்தன்மைதான் புறத்தோற்றத்தில் காணக்கிடைக்காத, ஒரு பொருளுக்குப் பலதன்மையுள்ள நானோ நுட்பமாகும்.

மேற்கூறிய குறளுக்கு அடுத்ததாக வரும் குறள்:

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்
(குறள் 359)

நோய்சார்ந்துள்ள DNAக்களைக் கண்டுணர்ந்து, அதன் சார்பு கெடக் காரணமானவற்றை அழித்தால் பின் வரும் சந்ததிகளை நோயற்றவர்களாக   மாற்றலாம் என்று இந்தக் குறட்பாவிற்குப் பொருள் கொள்ள முடியும்.

அடுத்து, நானோ அறிவியலால் DNAக்களைத் துண்டித்துச் செப்பனிடும் நுட்பம் நிலையாமை எனும் அதிகாரத்தில் வருகிறது.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்;
வாளது உணர்வார்ப் பெறின் (குறள் 334)

உயிரீரும் என்பது உயிர் செல்களில் வாழும் DNAக்கள் என்று எடுத்துக்கொண்டால், நுண்ணிய வாளது கொண்டு அவற்றை வெட்டிச் சரிசெய்யலாம் என்று வள்ளுவன் சொல்கிறான் என்பது புலப்படும். நாளெனஎன்பதற்குக் கலைஞர் கூறும் தெளிவுரை வாழ்நாள் என்பதாகும். எனவே மாலைக்கண், சர்க்கரை வியாதி போன்ற பிறப்பின் மூலமாக ஒருவர் பெற்ற நோய்களை DNAக்களை வெட்டிச் சரிப்படுத்துவதன் மூலம் நேராக்கலாம் (DNA Tweezers) என்ற செய்தி இந்தக் குறட்பாவில் ஒளிந்துள்ளதைக் காணலாம்.

இதைப் போலவே நானோ தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட ஆய்வான முதுமை தடுக்கப்படும் சாத்தியமும் குறளில் இடம் பெறுகிறது. அமிர்தத்தைக் குறித்து தமிழில் எண்ணற்ற கதைகளும் பாடல்களும் உள்ளன. சிறந்த சுவையுள்ள பொருளை அமிர்தம் எனக் கூறுவோம். மரணத்தை வெல்லும் அமிர்தத்தைப் பாற்கடலில் இருந்து தேவர்கள் கடைந்தெடுத்தாகக் கூறுகின்றன புராணங்கள். வள்ளுவனும் அமிர்தத்தைக் குறித்துப் பேசுகிறான்.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்  (
குறள் 64)
தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக் கரத்தால் அளாவப்பட்ட கூழ் அமிர்தத்தை விட இனிதானதாக ஆகி விடுகிறது. இது நமக்குத் தெரிந்த பொருள். இதில் மக்கள் என்பதைச் சந்ததியினராகவும், சிறுகை எனபதை நுண்கை (Nanoscope) என்றும், அமிர்தத்திற்குச் சாவா மருந்து என்றும் பொருள் கொண்டால், வரும் காலத்தில் அறிவியலாளர்கள் தமது நுண்கைகளால் நானோ நுட்பத்தின் வழிச் சாவாமருந்தைக் கண்டடைவர் என்ற பொருள் இதில் பொதிந்திருப்பதை அறியலாம்.

இன்னும் நானோ நுட்பத்தின் ஆதாரமாகிய நுணுகி நோக்குதலைக் குறித்தும் வள்ளுவன் பேசுகிறான்.

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்
கண்ணல்
தில்லை பிற  (குறள் 710)

நுண்ணறிவு பெற்ற அமைச்சரை அளக்கும் கோல் அரசரின் கண்ணன்றி வேறல்ல. அதுபோன்று மனிதனின் கண்ணால் பார்க்கப்படும் பொருள் மைக்ரோ அளவீட்டில் 10-6 மீட்டர் ஆகும்.
10-6 முதல் 10-10  மீட்டர் வரையிலான அளவீடுகளைக் காண Atomic force (AFM) நுண்ணோக்கிகள் வேண்டிவரும். அரசரின் கண்கள் சாதரணக் கண்கள் போலன்றி இன்னும் சிறப்பானதாக நுண்ணோக்கிகளைப் போல் இருக்க வேண்டும் என்று வள்ளுவன் கூறுவதாகப் பொருள் கொள்ள முடியும்.

மேலும், மருந்து எனும் அதிகாரத்தில் இடம் பெறும் குறள்கள் அனைத்திலும் நானோ தொழில்நுட்பத்தின் கூறுகளைக் காணலாம்.

மிகினும் குறையினும் நோய்செய்யு றூலோன்
வளிமுதலா வெண்ணிய மூன்று
(குறள் 941)

இக்குறட்பாவின் பொருள், உணவும் உழைப்பும் மிகின் நோய் செய்யும்; அதுபோல வாதம், பித்தம், சேத்துமம் மூன்றும் நோய் செய்யும் என்பதாகும். இதை DNA இல் உள்ள புரதத்தொடர் மிகினும் குறையினும் அது நோய் செய்யும் என்றும் கொள்ளலாம். இது நானோ பயோ தொழில்நுட்பத்தின் (Nano Biotechnology) ஓர் அங்கமாகும்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து
(குறள் 950)

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை நான்குவகைப் பாகுபாடு உடையது என்று இதற்குப் பொருள் சொல்கிறார் மு.வரதராசனார். இதில் முக்கியாமானது மருந்தாகும். DNA  தொடரில் தவறிய கூறினைச் சரி செய்தலே மருந்தாகும். இது நானோச் சொல்லாடலில் ACTG எனப்படும்.

முடிவுரை:

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு
(குறள் 425)

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு. அதாவது, உண்மை அறிவு என்பதானது  உலகத்தோடு இயற்கையோடு இயைந்திருக்க வேண்டும். இதையேதான் Nano Ethics உம் கூறுகிறது. நானோ ஆய்வில் நாம் சொல்ல வேண்டியதில் ஒரு கோட்பாடு இருக்க வேண்டும், அது உலகத்தோடு ஒத்திருக்க வேண்டும், உலகை அழிக்கும் ஆய்வுகளைத் தவிர்க்கவேண்டும். இந்நன்னெறியைப் பல்வேறு குறட்பாக்களில் நாம் காணலாம்.

இல்நுழைக்கதிரில் நுண்ணிய தெரியின்என்ற திருவாசகத்தின் கூற்று போல், அறிவியல் என்ற ஒளியுடன் குறட்பாக்களைப் பார்க்குமிடத்து அவற்றில் பல நுண்ணிய அறிவியற் கூறுகள் தென்படுகின்றன.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
(குறள் 427)

இதற்குப் பரிமேலழகர் - வரக்கடவதனை முன் அறிவதே அறிவு என்றும்வருமுன் அறிவதும் அதனை எண்ணுவதும் அறிவுடையார்களின் சிறப்பு என்றும் பொருள் கூறுகின்றார். வள்ளுவன் மானுடத்திற்கு வழிகாட்டியாக பல செய்திகளை அறிவுறுத்துகிறான், அதில் வள்ளுவனுக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த நானோ தொழில்நுட்பமும் அமைந்துள்ளது  என்றால் மிகையாகாது.



பெரிய புராணம்


தமிழரின் அக்கால வாழ்விய​லை அப்படி​யே சித்தரித்துக் காட்டும் ​பெரிய புராணம், தமிழ் ​மொழிக்கு ஒரு மகுடமாகும்.  சாதி, சமய பிணக்குக​ளைக் கடந்து, பக்தி ​வைராக்யம் ஒன்​றை​யை பிரதானமாகக் ​கொண்டு வாழ்ந்த அடியார் பற்றிய ஆற்புத வரலாற்று நூல்.  இ​றைவ​னே அடி​யெடுத்துக் ​கொடுத்தது உண்​மை என்பது இத​னைப் படிப்​போருக்கு நிச்சயம் உணர்த்தும் நூல் இது.
"நாமார்க்கும் குடியல்லோம்" என்றெடுத்து நான்மறையின் கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத் தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி "ஆமாறு நீரழைக்கும் அடைவிலம்" என் றருள் செய்தார்.

கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்பால் மெய்த்தாயினும் ஆஇனியானைஅவ் வியன் நாவலர் பெருமான் "பித்தாபிறை சூடி எனப் பெரிதாந்திருப் பதிகம் ஆஇத்தாரணி முதலாம்உல கெல்லாம்உ(ய்)ய எடுத்தார் 
 

தமிழ் வளர்ச்சியில் ​​சைவ சமயத்தின் பங்கு



தமிழ் வளர்ச்சியில் ​​சைவ சமயத்தின் பங்கு
(மு​னைவர். ​​ரெ. சந்திர​மோகன், இயற்பியல் து​றை, ஸ்ரீ​சேவுகன் அண்ணாம​லை கல்லூரி, ​தேவ​கோட்​டை 630 303)


முன்னு​ரை
ஒரு ​மொழி வளர்ந்துள்ளது என்றால், அதற்கு முக்கியமான காரணிக​ளை ஆய்ந்து சீர்தூக்கிப் பார்த்​தோமானால், அவற்றில் முக்கியமானதாக சமயம் திகழும்.  இது அ​னைத்து ​மொழிகளுக்கும் ​பொதுவாகும்.  கல்​தோன்றி மண் ​தோன்றாக் காலத்​தே முன் ​தோன்றிய மூத்த தமிழ் ​மொழியாம் ​செம்​மொழி.  நயத்தக்க நாகரீகம் பற்றி ​பேசிய ​மொழி.  யாதும் ஊ​ரே, யாவரும் ​கேளிர் என்ற ஒரு​மைப்பாடு, பிறப்​பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற  ஒப்பற்ற ​செயதி, யாம்​பெற்ற இன்பம் ​பெருக இவ்​வையகம் எனும் மாண்​பு, ​போன்ற எண்ணற்ற ​செல்வங்க​ளைக் ​கொண்டது. 

இத்தமிழ் ​மொழி ​பேசும் மக்கள் இயற்​கை​யோடு இ​யைந்த வாழ்க்​கை​யை ​மேற்​கொண்டிருந்தனர் என்று உலகம் அ​னைத்தும் வியந்து ​போற்றி வருகின்றது.  தமிழ் ​​​மொழி வளர்ச்சியில் "சங்கத்தமிழ்" வளர்த்த மன்னர்கள், சங்கம் மருவிய காலம் வரையிலான பல புலவர் ​பெருமக்கள் இருந்துள்ளனர்.  சங்கத்தமிழ்க்  காலத்திற்கு முன்பும் கூட கிராமிய ​நாட்டுப்புற இலக்கியங்கள் ​செவிவழியாகத் ​தொடர்ந்து தமிழ் சமுதாயத்தில் வளர்ந்து ​செறிந்து உள்ளது.

இந்திய  மண்ணின் ​​செல்வச் சிறப்பி​னை உணர்ந்து உலக​மெங்கும் இருந்து கலை, ​செல்வம், இலக்கியம், சமயம் என அ​னைத்​துக்கும் தாயாக விளங்கிய பாரதத்தில்  இருந்து தங்கள்நாடு பலன் ​பெற வாணிகம், ப​டை​யெடுப்பு ​செய்துள்ளனர். மங்​கோலியர் வருகை, ​பெளத்தம், இசுலாம், கிருத்துவம், ​போன்ற சமயங்களின் அணிவகுப்பு என்று இந்தியா முழுதும் பல்​வேறு மாற்றங்களில் பல அற்புதப் ப​டைப்புகள் ம​றைந்து ​போயின. இதனி​டை ‘ஆடிப்​பெருக்கு’ ​போன்ற சடங்குகளில் பல சுவடிகள் அழிந்தன.  ஆயினும் அவ்வப்​போது தமிழ் ​மொழியின்  வளர்ச்சிக்கும் அ​வை உதவின.  சீறாப்புராணம், ​போப்​பையரின் திருக்குறள், திருவாசக ​மொழி ​பெயர்ப்புகள் தமிழ் ​மொழியின் வள​மை​யை உலகிற்கு பறை சாற்றின.  இக்கட்டு​ரையில் தமிழ் வளர்ச்சியில் ​​​சைவம் ஆற்றிய பங்கி​னையும், பாங்கி​னையும் காணலாம்.

​​சைவ சமயம்
            ​சைவ சமயம் என்பது முப்​பொருள்களான "பதி, பசு, பாசம்" என்ப​தை ஏற்றுக் ​கொண்ட மக்க்​ளைக் ​கொண்டது. "சிவன்" என்ற பெய​ரையு​டைய இ​றைவன் எண்குணங்கள் ​பெற்றவன் என்றும், அதில் உயிர்களின் ​தொகுதி​யை ‘பசு’ என்றும், அவற்றின் த​லைவன் 'பதி' - சிவன் என்றும், பசு அனாதி​யே ‘பாசம்’ என்ற கயிற்றினால் கட்டுப் பட்டுள்ளது.  அந்தக் கயிறு முப்​பொருள்களால் ஆனது.  இவற்றிற்கு பாசம் முப்​பொருள்களான ஆணவம், கன்மம், மா​யைத் ​தொகுதி​யை குறிப்பதாகவும் ஏற்றுக் ​கொண்ட மதம்[1].
​மொழிவளர்ச்சி
ஒரு ​மொழி வளர்ச்சி என்பதில் புதிய ​சொல்லாக்கம், ஒரு ​பொருட் பன்​மொழி பல்வகைகளில் உருமாரும் ​சொற்கள், புதிய அணிகள், புதிய உருவகங்கள், மாதிரி வடிவங்கள்,  பரவசத்​தைத் தூண்டும் ​செய்திக​ளை இலகுவாக பரிமாற்றம் ​செய்ய உதவுதல் ​போன்ற​வைகள் அடங்கும்.
அவ்வ​கையில் ‘பதி, பசு, பாசம்’ என்ப​தே ஒரு ​மொழி வளர்ச்சிச் சிந்த​னையாகும்.  தமிழ் ம​றை ஞானசம்பந்தனின் ​தேவாரங்கள், திருமூலரின் திருமந்திரம் ​போன்ற​வை ​தேர்திரமாகவும், மந்திரமாகவும் திருக்​கோயில்களில் பயன்படுத்தும் வ​கையில் இயற்றப்பட்ட​வைகளாகும்.
தமிழ் நாட்டில் வட​மொழியில் அர்ச்ச​னை ந​டை​பெறுவது தவிர்க்க முடியாதது என்று புலம்பும் கூட்டத்திற்குச் சவாலாக பன்னிறு திரும​றைகள் விளங்குகின்றன.  வள்ளுவரின், "கனியிருக்கக் காய் கவர்ந்தற்று" என்ற குறட்பாவிற்கு "நானறிந்த தமிழ் ​மொழியிருக்க, என் நண்பன், என்த​லைவன், என்இ​றைவனிடம் ​பேசுவதற்கு ‘சங்​கேத பா​சை’ எதற்கு, தவறாக உச்சரித்தால் தவறான வரம் கி​டைக்கலாம் தா​னே" என்பது ​போல் வள்ளுவப் ​பெருமகனார் நகுதல் ​போன்று ​பொருள் ​கொள்ளலாம்.

"யாமறிந்த ​மொழிகளி​லே, தமிழ் ​மொழி ​போல்
இனிதாயுளது எங்கும் கா​ணோம்" என்று பன்​மொழி பண்டிதன் பாரதி பகர்ந்தது எதனா​லே என்று ஆய்ந்த​போது, பாரதியின் கவி​தைகளில் மிளிர்கின்ற சந்தம், ​பொருள், அணிகளில் கலந்திருந்த ​​சைவ, ​வைணவ இலக்கிய வாசிப்புகளின் பாதிப்பு என்ப​தை பல ஆன்​றோர்கள் ஆய்ந்து பதிவு ​செய்துள்ளனர்.
இனி சாஸ்திரம், ​தோத்திரம் தவிர இ​றைவனிடம் எப்படி இரண்டறக் கலத்தல் முடியும் என்ப​தை திருவாசகம் கூறும் மு​றையில் எந்த நூலும் செய்தது இல்​லை எனலாம்.  தமிழ் நூல்களின் வரி​சையில் அகத்தி​ணை, புறத்தி​ணை என்ற பாகுபாட்டில் அடங்காத ஒரு நூல்.  தன்​னை​யே, ​பெண்ணாகவும், ஆணாகவும் இ​றைவனின் ​தோழனாகவும், பிற ​நேரங்களில் சுய ஆய்வு ​செய்து, தன் ஆற்றா​மைக​ளைப்  புலம்பும் சக மனிதனாவும், தம்மிற் சிறந்த ஆடியார்கள், சிவ​நெறிச் ​செல்வர்கள் கூட்டத்தில் ​சேர, நாடகமாடி, ​வெற்றி ​பெற்ற ஒரு உயிரின் புலம்பல் திருவாசகம் எனும் காவியமாகிறது.  இதற்கிடையே பல உட்க​தைகளில்  திரிபுரம் எறித்தல், தாயுமானவராய் பன்றிக்கும் கரு​ணை காட்டிய ​பெற்றியும், நரி​யைப் பரியாக்கி தமக்காக பிரம்படிபட்ட ​கொள்கையும், மணிவாசகர் ​கையாள்கின்ற யுக்தி, பல்வ​கையில் இலக்கிய வகை  களிலே​யே புது​மையாகும்[2].

திருவாசகச் சிறப்பு
"சிவபுராணம்" என்று துவக்கத்தி​லே​யே ஒரு புதிய சிந்த​னை.  "புராணம்" என்றால் ​தொன்று ​தொட்டு, பழ​மையான ஒரு க​தை ​என்று ​பொருள். அதில் க​தை மாந்தரின்​ தோற்றம், வளர்ச்சி, ஊர், அதன் சிறப்பு என்று எண்ணற்றவைகள் ​பேசப் ​பெறும்.  ஆயின் ​தோற்றமும், முடிவுமிலா இ​றைவனுக்க புராணம் எழுதுவது ​எப்படி என்ற யுக்தி, புது​மையிலும் புது​மையாகும்.  இ​றைவன் தன்னுள் எழுந்தருளிய தருணத்​தை​யே, அவனது  தோற்றமாகவும் அவன் நீடித்து தன்னுள் இருக்கும் காலத்தில, ​தோன்றும் உணர்வுகளினால் இ​றைவன் எப்படியுள்ளான் என்ப​தை பிதற்றும் முகமாக அருளும் 658 பாடல்க​ளை, 6 வாழ்க, 5 ​வெல்க, 8 ​போற்றி என்று திருவாசகம் முழு​மையின் சாராம்சத்​தை சிவபுராணத்தில் தந்துள்ளார்.

மனிதன் விழித்த நி​லையில் எண்ணிக்​கை ​தெரியும், ஆதனால் தான் முதன்முதலில் நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! என்று ஆரம்பித்து, ..... ஆராத இன்பம் அருளும​லை ​போற்றி! ..... என்பது வ​ரை மனத்​தை ஒருங்கி​னைத்து இறைவாழ்த்து பாடுகின்றார்.

"சிவனவன் சிந்​தையில் நின்ற அதனால்" என்ற நி​லையில் சிந்​தையில் இ​றைவன் எழுந்தருளியவுடன், முந்​தைவி​னை முழுதும் ஓய சிவபுராணம் உ​ரைப்பன் .... என்று பின்னர், பிதற்றல் துவங்குகிறது.

இ​றை-உயிர்க் கலவியில், பிதற்ற​லை நூல் முழுக்கக் ​கொண்டு ​செல்கின்றார்.  திருவம்மா​னை, திருஊஞ்சல் திருத்​தெள​ளேணம், திருவுந்தி ​யென்ற மகளிர் வி​ளையாட்டுகளில் பயன்படுத்தும் ​சொற்கள், ​பொருள், உவமம் என்று பல்வ​கையில் தமிழ் ​மொழிக்கு அணி ​செய்யும் அற்புதத் திருப் பாட்டுக்கள் திருவாசகமாய் மலர்ந்திருக்கின்றன.

ஒரு எடுத்துக் காட்டி​னைக் காண்​போம். 
கோயில் திருப்பதிகம் ஏழாம் பாடலில்,
"இன்​றெனக்கருளி இருள் கடிந்து உள்ளத்
​தெழுகின்ற ஞாயி​றே ​போன்று
நின்ற நின் தன்​மை   நி​னைப்பற நி​னைந்​தேன் 
நீயலால் பிறிது மற்றின்​மை
​சென்று ​சென்று அணுவாய்த் ​தேய்ந்து ​தேய்ந் ​தேய்ந்​தொன்றாம்
திருப்​பெருந்து​றை சிவ​னே
ஒன்று  நீ அல்​லை யன்றி ஒன்றில்​லை 
யாருன்​னை அறியகிற்பா​ரே"
இத் திருப்பாடலில்  இ​றைவன் எங்குமாய் எல்லாமாய் என்றுமாய் இருக்கும் தன்​மை​யை விளக்கும் மணிவாகசர், இரண்டு உவ​மைக​ளைக் ​கையாள்கின்றார்.  இ​வைகள் படிப்பவர் உள்ளத்தின் ​மேன்​மை​யைப் ​பொருத்து சிறந்த ​பொருள்க​ளைத் தரும்.  சூரியன் முன் விளக்​கொளி காரியப்படாது.  அடங்கி நிற்றல் ​போலவும், த​லைவியும் த​லைவனும் கூடல் நுகர்ச்சியின் ​போது உணர்வற்று இருப்பது​போலவும் என்று உவமிக்கின்றார்[3].  இத​னை​யே உணராமல் உணர்வது, உணர்வதால் உணராதது என்றும் ​கொள்ளலாம். இது​போன்று நுட்பமான ​செய்திக​ளை திருவாசகம் எங்கும் காணலாம்.

பிற சான்றுகள்
தமிழ்ச்சங்கத்தின் த​லைவனாகக் ​கொண்டும், தமிழ்க்குமரனாக முருகப் ​பெருமா​னையும் ​கொண்டு இ​றைவனுக்கும் ​​மொழிக்குமான ​தொடர்​பை ​வைசவம் தந்தது ​போல் பிற மதங்கள் தந்ததில்​லை.
"ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!" "ம​கேந்திரமதனிற் ​சொன்ன ஆகமம் ​தோற்றுவித்து அருளியும்", "மூவா நான்ம​றை முதல்வா ​போற்றி" என்று அறம் ​பொருள் இன்பம் வீடு என்ற நான்ம​றைகள் இ​றைவனிடம் இருந்து ​தோன்றிய​வை என்றும் அ​வைகளின் விளக்கமாய் சிவஆகமங்கள் ​தோன்றியுள்ளன என்றும் மணிவாசகர் கூறுகிறார்.  அதனால்தான் இன்றும் திருவாசகம் முற்​றோதுதல் நிகழ்வுகள் நிகழ்ந்து ​கொண்டுள்ளன.  பன்னிரு திருமு​றைகள் மட்டுமின்றி சந்தானக் குரவர்கள் இயற்றிய பல ஞானப் ​பொக்கிசங்கள் தமிழ் ​மொழிக்கு ​மேலும் வளம் ​சேர்த்துள்ளன.
இக்கால கவிஞர்களும்[4], திருவாசத்தின் பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத நிலையில் தமிழ்​​மொழிக்குப்  ​பெருவள​மை​யைச் ​சேர்த்திருக்கின்றார் மணிவாசகர்.

ஞானசம்பந்தர் பாடல்களில், மூர்த்தி, தலம், கீர்த்தி, 8வது பாடலில் இராணவனன், 9-10 புறச்சமயத் தாழ்வு நி​லை, 11ஆம் பாடலில் திருக்க​டைக்காப்பு என்ற கட்ட​மைப்பு உள்ளது.   ஆனால் திருநாவுக்கரச​ரோ, மூர்த்தி, தலம், கீர்த்தி, 8வது பாடலில்  இராவணன், ஆனால் 9இல் புறச்சமயச் சாடல் இல்லாத நி​லையில், 10ஆம் பாட​லையும், இராவணனுக்கு இ​றைவன் அருளிய திறத்​தைப் பாடுகின்றார்.  சமண சமயத்திலிருந்து வந்ததாலும், தன் வயதிற்கு யா​ரையும் பழித்துப் ​பேசல் கூடாது என்பதாலும், திருமண​மே ​செய்து ​கொள்ளாமல் வாழ்ந்த நாவுக்கரசர்.  பிறர் மாதர் ​மேல் பற்று ​வைத்த இராவ​ண மன்னனுக்கும் இ​றைவன் அருளிய​தை மிகப் ​​பெரும்  பேற்றாகவும் ​கொண்டு தம் திருமு​றைக​ளை அ​மைத்த பாங்கு தமிழுக்குப் பெரிதும் வளம் ​சேர்த்துள்ளன.

திருமூலர், வட​மொழியிலிருந்து மந்திரங்கள், சாத்திரங்கள் முதலியவற்​றைத் தமிழில் அற்புதமாய் ​செய்துள்ளார்.
"மரத்​தை ம​றைத்தது மாமத யா​னை
மரத்தில் ம​றைந்தது மாமத யா​னை
பரத்​தை ம​றைத்தத பள்முதப் பூதம்
பரத்தில் ம​றைந்தது பார்முதப் பூதம்"
என்ற வ​கையில் பகுதி, விகுதி மாற்றத்தில் அற்புதமான ​செய்திக​ளை ஒழித்து இயற்றிய பாடல்கள் பல ​மொழிக்கு வளம் ​சேர்க்கின்றன.

தமிழரின் அக்கால வாழ்விய​லை அப்படி​யே சித்தரித்துக் காட்டும் ​பெரிய புராணம், தமிழ் ​மொழிக்கு ஒரு மகுடமாகும்.  சாதி, சமய பிணக்குக​ளைக் கடந்து, பக்தி ​வைராக்யம் ஒன்​றை​யை பிரதானமாகக் ​கொண்டு வாழ்ந்த அடியார் பற்றிய ஆற்புத வரலாற்று நூல்.  இ​றைவ​னே அடி​யெடுத்துக் ​கொடுத்தது உண்​மை என்பது இத​னைப் படிப்​போருக்கு நிச்சயம் உணர்த்தும் நூல் இது.  மனிதனாய், நண்பனாய், தலைவனாய், குழந்​தையாய், ஆணாய், கற்ப​னை ​செய்து, இலக்கியம் ​செய்யலாம்.  ஆனால் தன்​னைப் ​பேயாய்ப் பாவித்து, அப்​பொழுதும் கூட இ​றைவ​னை​யே நினைத்து வாழும் ஒரு ஆத்மா பயன்படுத்தும் ​சொற்களால் புது​மையாக எழுதப்பட்டது கா​ரைக்கால் அ​ம்​மையாரின் திருமு​றைகள்.  அக்களம்பகத்தில், எண்ணற்ற ​செய்திகள் சந்தங்கள், ஆவியுலகக் காட்சிகள், என்ற அற்புதமான உலகினும் தமிழ் ​மொழி பயன் ​பெறும் என்று இத் திருமு​றை கூறுகின்றது.

முடிவு​ரை
மேற்குறிப்பிட்ட ​இவற்றுடன் உலக ​சைவசித்தாந்த மாநாடு, திருமந்திர மாநாடு, திருக்குறள் ​பேர​வை, ​சைவத் ​தொண்டு முதலிய எண்ணற்ற ​தொண்டுக​ளை திருவாவடுது​றை, தருமபுரம் ஆதீனங்கள் பல அறிய தமிழ்ப்பணி ​செய்வ​தை நாம் நினைவு கூறலாம்.   ஒரு ​மொழியின் வளர்ச்சியில் சமயம் ​பெரும் பங்கு வகிப்பது உண்மை​​யே[5].  உருது  ​மொழிக்குக் குரான், கி​ரேக்க பாரசீக ஆங்கில ​மொழிக்கு ​பைபிள், எகிப்தின் குனேபார்ம், சீன ​செளராஸ்ட்ர இத்தாலி ஹீப்ரு ​மொழிகளில் வளர்ச்சியிலும் சமயம் ​பெரிதும் உதவியுள்ளது உண்​மை​யே.  அது​போன்​றே தமிழ் ​மொழி வளர்ச்சிக்கும்  பல சமயங்கள் பல சமயங்களில் உதவியதும் உண்​மை​யே.  ஆயினும் ​சைவ சமயம் தமிழ் ​மொழி வளர்ச்சியில் ஆற்றிய பங்கிற்கு நிகராக பிறி​தொன்று  ​செய்ததில்​லை என்பது உள்ளங்​கை ​​நெல்லிக்கனியாகும்.

-------------





[1] ​சைவ சமய வரலாறு, கு.​வைத்தயநாதன், திருவாவடுது​றை ஆதீன ​​சைவசித்தாந்த பயிற்சி நூல்.
[2] புதிய ​நோக்கில் திருவாசகம், தமிழண்ணல்
[3] திருவாசகம் குருவருள் விளக்கம் - உ​​ரை, தண்டபாணி ​தேசிகர், விக்கிரமசிங்கபுரம். ஆதீனப் பதிப்பு
[4] ​தேசியம் வளர்த்த தமிழ், கா. திரவியம், பூம்புகார் பிரசுரம், ​சென்​னை
[5] Mario Pei, George Allen & Unmin Ltd., (1965) London Page 206-15.